எங்களைப்பற்றி
சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய துணிக்கடையாக நம்பர் 60, ரங்கனாதன் தெருவில் மக்களுடைய தேவைகளுக்காக நம்ப முடியாத எல்லா தரப்பினரும் வாங்கக் கூடிய வகையில் ஆரம்பித்த சரவணா ஸ்டோர், இன்று சென்னை மாநகரத்திற்கே பெருமை சேர்க்ககூடிய அளவில் மிகப்பிரம்மாண்டமான கடையாக வளர்ந்து நிமிர்ந்து நிற்கிறது. இதனுடைய வெற்றிக்குக் காரணம் இடைவிடா முயற்சியும், நல்ல வியாபாரத்திறமையும், வழிகாட்டுதலுமே ஆகும்.
மக்களுடைய தொடந்த ஆதரவினால் வியக்கதக்க அளவில் வளர்ந்து, சரவணா ஸ்டோர் இன்று தி நகரில் அமைந்துள்ளது.
நெசவுத்தொழிலின் தரம், சிறப்பு, நேர்த்தி, அழகு ஆகியவை மூலம் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சரவணா ஸ்டோரில் ஆடைகள் வாங்குபவர்களுக்கு துணியுலகின் சொர்க்கம் என்று சொல்லுமளவிற்கு இது அமைந்துள்ளது. எல்லா விலையிலும், தரத்திலும், நம்பத்தகுந்த விலையில் இங்கு துணிகள் அனைத்து தரப்பட்ட மக்களும் வாங்கும் வகையில் அமைந்துள்ளது.
காலத்திற்கேற்ப வகைவகையான சுடிதார்கள், பட்டுபுடவைகள், டிசைனர் புடவைகள், ரெடிமேட் ஆடைகள், ஆண்களுக்கான ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், காலணிகள் இவையாவும் எதை எதிர்பார்த்து சரவணா ஸ்டோர்ஸிற்கு மக்கள் வருகிறார்களோ அவையனைத்தும் இங்கு கிடைக்கின்றன







